Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.625.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்து மூன்றாம் அதிகாரம்.


உலகந் துறவாமை.


துவ்வார் = நீங்கி யொழிதல் இல்லாது உலக போகத்தைத் துய்க்கின்றோர்.




5

நிட்டையிற் கூடினு நில்லா தொழியுமே

பட்டையற் றிட்டமரம் பாழ்த்து.

625


குறள் விளக்கம்


தெய்வ சிந்தனை அதிகரித்து, ஒருமையால் அகத்தே ஒன்றி நிற்கின்ற நிட்டையினால் பெரிய இன்பானுபவம் பெறுவது அருமை. அப்படிப் புற தேகாதி பிரபஞ்சத்தை மறந்து, சமாதி நிட்டையில் உறைந்து போவதால், சீவ தேகமும், அத்துடன் இன்பானுபவ ஞான ஞாபகமும் ஒழிந்து சூனியமாய் விடும்.


இது எதுபோல் எனில், வளர்கின்ற பச்சை மரம் பட்டை நீக்கப்பட்டல் பாழ்பட்டு வெறும் கட்டையாகி விடுவது போன்றாம்.


ஆதலால், உண்மைப் பொருள் ஓர்ந்து உட்கூடி உலகில் சகச அனுபவத்தோடு வாழ்தல் ஒன்றே நலமாம்