தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்து மூன்றாம் அதிகாரம்.
உலகந் துறவாமை.
|
4 |
துறந்தாருந் துவ்வாருஞ் சுத்ததய வின்றேல் இறந்தாரே யாவா ரிவண். |
624 |
குறள் விளக்கம்
உலக போகத்தைத் துறந்து தவமேற்கொண்டு தனித்துச் சென்று வாழ்பவரும், அவ்வாறின்றி உலக போகத்திலே மூழ்கித் துய்க்கின்றவர்களும் நல்லின்பத்தை அடைந்து விட மாட்டார்கள். ஊழுட்டுஞ் சிறு இன்பத்தைச் சில கால் நுகர்ந்து ஒழிவார்கள்.
ஆதலின், எவ்வகையிலும் யாவரும் சுத்த தயா சன்மார்க்க வாழ்வு ஏற்று. உலகியலைத் தயவியலாலே தாங்குவதொன்றே பேரின்பம் அடையும் பெருநெறியாகும்.
துவ்வுதல் = நீங்கி ஒழிதல்.
துவ்வார் = நீங்கி யொழிதல் இல்லாது உலக போகத்தைத் துய்க்கின்றோர்.
Write a comment