தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்து மூன்றாம் அதிகாரம்.
உலகந் துறவாமை.
|
2 |
உலகைத் துறவா துடலைத் துறவா(து) இலகுற் றருளா லிரு. |
622 |
குறள் விளக்கம்
திருவருளை அடைந்து, அதனாலே, அகமும் புறமும் தாங்கப் பெற்று அருள் வண்ணமாக விளங்குவதே சுத்த சன்மார்க்க இலட்சியம் ஆகும்.
துறவு நெறியால் முதலில் உலகைத் துறந்து மறைந்து தவமேற்கொண்டு, பின்னர் உடம்பையும் வெறுத்து, தேகாதி பிரபஞ்சத்தையெல்லாம் மறந்து, முடிவில் இறந்தும் போவது சன்மார்க்க இயல் அல்ல. அதில் பேரின்பமும் இல்லை.
ஆதலின், அருளொளி உருவோடு இலங்குவதற்கு முயற்சி மேற்கொண்டால் அத்திருவருளே கூட்டி வைக்கும். ஆனந்த வாழ்வு சித்திக்கும்.
Write a comment