Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.619.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்திரண்டாம் அதிகாரம்.

பணிவு.

9.

தான்கெட் டவர்க்குந் தயைசெய்தல் மெய்ப்பணிவு

மான் தெண்டனாமோ வணக்கு.

619.

குறள் விளக்கம்

பணிவு என்பது வணக்கம் என்று வாயினால் சொல்வதுவும், கரம் குவித்துச் சிரம் தாழ்த்தி நிற்பதுவும். அடி வீழ்ந்து தெண்டனிடுவதுவும் ஆகிய இச்செயல்கள் மட்டுமோ ? அன்று.

தான் என்ற தற்போத உணர்ச்சி அழிய அகமுருகி அருட்பெருக்கால் அன்பொடு பணிதலே உண்மையான பணிவாகும். இந்நிலையினின்று தயவுப்பணி செய்கின்ற போது வாழ்த்துவதும் வணங்குவதும் உடன் அமையும்.

மான் = மால் = பெருமை, மயக்கம்.

மான்தெண்டன் என்றது, பெருமையாகத் தோற்றுகின்ற புறப்பணிவு. மயங்கிய நிலையில் செய்யும் வணக்கம்.