தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்திரண்டாம் அதிகாரம்.
பணிவு.
|
7. |
இன்புலகி லோங்க இசைக பணிவோடு அன்புலரி லுண்டா மஞர். |
617. |
குறள் விளக்கம்
நல்ல உலகத்தவருடன் கூடி வாழ்க்கையைப் பணிவுடன் நடத்தினால் இன்பம் உண்டாகும். இதற்குத் தயா சன்மார்க்க நெறி பற்றுதல் வேண்டும். மற்ற மார்க்கங்களில் அகிலமாம், அன்புக்குத் தடை உண்டாவதால், வாழ்வில் தயா நீர்மை குன்ற வறட்சியும், அதனால் துன்பமும் வந்துறும். உள்ளதன்பு உலராது உலகோடு ஒட்டி வாழற்கு யாவரும் இத்தயாமார்க்கம் மேற்கொண்டு ஒன்றுபட்டு வாழ்ந்து பேரின்பம் அடைவார்களாக.
அஞர் = துன்பம்.
Write a comment