Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.613.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்திரண்டாம் அதிகாரம்.

பணிவு.

3.

தணிவேண்டு மாங்காரந் தானொழிய வுள்ளுருகிப்

பணிவேண்டுஞ் சோதி பதம்.

613.

குறள் விளக்கம்

நானென்ற அகங்காரம் அழிதல் வேண்டும். இதற்குத் தயா ஒழுக்கத்தில் இருந்து அகம் நெகிழச் செய்தல் வேண்டும். இந்நெகிழ்ச்சியால்தான் உலகியலில், உண்மையாகத் தணிந்து போகின்ற பழக்கம் உண்டாகும்.

சத்விசாரமும் உடனிருக்கும்போது, அகத்தே அருட் சக்தியைப் பணிதலும், புறத்தே கடவுளாணையால் சூழுகின்ற உலகுயிர்கட்குப் பணிந்து பணி புரிதலும் உண்டாம். இவ்விரு பணிவாம் திருப்பணியால் பெரிய இன்பம் உண்டாவது அனுபவம்.