Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.612.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்திரண்டாம் அதிகாரம்.

பணிவு.

2.

உயிரிரக்கங் கொண்டா ரொளிசெய்வா ருற்று

பயிலுக பண்பாற் பணிந்து.

612.

குறள் விளக்கம்

சீவ தயை பூண்டவர்கள் எவ்வகையிலும் அவ்வுயிர்கட்கு உள்ளும் புறமும் விளக்கம் செய்யவே முற்படுவார்கள். அன்றி அவைகட்கு ஒரு போதும் ஊறு செய்ய உள்ளார்கள்.

ஆதலின், இவ்வுயிர் இரக்க நற்குணம் நிறைவெய்த, பணிந்தன்பு செய்ய மேன்மேலும் பழகுதல் வேண்டும். பணிந்து ஈர்ந்து இன்புறுவதே மேலானது, கடனுக்காகவும். பிறர் புகழற்காகவும், பெருமித கர்வத்தாலும், அகங்காரத்தோடும் ஈகை புரிதல் இன்ப வாழ்வுக்கும் உதவாதாம்.