Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.610

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்தோராம் அதிகாரம்

பத்தித் தோத்திரம்.

10.

கலையுதித்த காற்காண கைக்கொள் தயாபற்

றிலையெனில் வாழ்வு மிலை.

610

குறள் விளக்கம்

எண்ணிலாத கலைகளும் கடவுள் திருவடியினின்றே உதிக்கின்றன. இக்கடவுள் திருவடியில் ஒன்று அகத்தே பொருந்து உள்ளது. இது சுத்த தயவினால் பற்றப்படுவது.

அப்படித் தயவினால் பற்றிக் கொண்டால்தான், அவண் உதிக்கின்ற கலை உண்மையாகவும் அறிந்து பயன் பெற்று, அதற்கு இணையாய் புறத்திருவடியில் வெளிப்படுகின்ற பிரபஞ்சக் கலையின் உள்ளீடாய் ஒளிரும் திருவருட் சக்தியையும் கண்டு போற்றிப் புகழ்ந்து இனிது வாழலாம். இப்படி உள்ளுணர்ந்து செய்யும் பக்தித் தோத்திரமே கடவுள் கலை தரும் மெய்ப்பொருளாம்.