Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.606

தினம் ஒரு தயவுக்குறள் எண்.606.

தயவு சரவணானந்தா.

அறுபத்தோராம் அதிகாரம்

பத்தித் தோத்திரம்.

தொண்டுந் தொழுகையுஞ் சூழு மகமிருந்து

அண்டுமே அண்ட னருள்.

606

குறள் விளக்கம்.

அகத்திலே பொருந்து இருந்து விளக்கம் உண்டாகப் பிரார்த்திக் கொண்டும், உயிர் விளக்கம் உண்டாகக் கருணைப் பணி புரிந்து கொண்டும் இருத்தல் வேண்டும். இம்முறையால் நம் பதியின் அருள் வெளிப்பட்டு, வாழ்வை இன்ப மயமாக்கும்.

ஆகவே திருவருளை அடைவதற்குத் தயவோடு கூடிய பக்தித் தோத்திரம், தொழுகையும் தொண்டுமாகப் பெருகுகின்றதாம். அகத்திருந்து இத்தொண்டும் தொழுகையும் வெளிப்பட்டால் தான், திருவருள் கிட்டும். அருள் அனுபவம் உண்டாகும்.

அகநிலை ஒன்றாத புலன் நிலைகளில் இருந்து எழுகின்ற. பற்றொடு கூடிய, தொண்டும் தொழுகையும், திருவருளை அடைவிக்காது. அதனால் கருதிய பயனும் கைகூடாது.