Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.605.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்தோராம் அதிகாரம்

பத்தித் தோத்திரம்.


5.

அகம்பற்றா தோடுலகில் ஆழ்பத்தி செய்தல்

செகமெச்சு மில்லை சிறப்பு.

605

குறள் விளக்கம்

அசைவற உள்ள உள்ளத்தில் ஒன்றிடாத மனோ கரணம், புலன் வழிகளில் சென்று சுழன்று ஓடுகின்ற உலகில் உழன்று ஆடிக் கெடும். இந்நிலையில் புறத்தே செய்கின்ற பலர்புகழ் பக்தி வழிபாட்டால் உண்மையான இன்பம் உண்டாகின்றதில்லை. ஆதலின், இது சிறந்த பக்தியாகாது.

உண்ணின்று, பற்றற சுத்த தயவினால் புரிகின்ற கருணைச் செயல் எதுவாயினும். அதுவே பக்திச் செயலாகும். இதனால் உறுகின்ற இன்பமே உண்மையான இன்பமாகும்.