தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தோராம் அதிகாரம்
பத்தித் தோத்திரம்.
|
4. |
துதித்தபோ தெல்லாம் துளக்கற்றுள் ளூன்றிப் பதித்திடு வாழ்க படிந்து. |
604 |
குறள் விளக்கம்
கடவுட் புகழைப் போற்றிடும் போதெல்லாம், மனம் அசைவின்றி, கலக்கமின்றி உள்ளொளியில் பொருந்திட நிற்றல் வேண்டும். தோத்திர கீதங்களைக் கேட்டபோதும் அப்படியே உட்சாருதல் வேண்டும். அங்ஙனம் அகத்தில் நிலைத்து நின்று, தேகப் பற்றற்று தயா வாழ்வு நடத்த உள்ளொளி பெருகி, உணர்வில் செறிந்து, உயிருடம்பில் நிறைந்து இன்பானுபவமாய்த் திகழ்வது தான் தெய்வ வணக்கத் துதியின் குறிக்கோளாம்.
Write a comment