தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தோராம் அதிகாரம்
பத்தித் தோத்திரம்.
|
3. |
ஆலயமும் ஆண்டவரும் ஆருமிட மோராத மாலைபத்திப் பாடல் மயக்கு. |
603 |
குறள் விளக்கம்.
புறப் பக்தியோடு மட்டும், தெய்வத்தை முன்னிலையாய்க் கொண்டு திருப்பாடல்கள் பாடித் தன்வசம் கெட்டு நிற்றல் பெரிய இன்பமாகாது, அது மயங்கு நிலையேயாகும்.
அக ஆலயமும் அதில் திகழும் கடவுட் சோதியும் நன்கு உணரப்பட்டு, அவற்றில் உண்மைப் பற்று உண்டாகப் பாடிப் பணிவதால்தான் நாதப் பிரம்மானந்தம் உண்டாம்.
ஆலயமும் ஆண்டவரும் பொருந்தியுள்ள இடம் நம் சிற்றம்பலம். ஆதலின், அதன் முன் நின்று பெருமை தரு தெய்வப் பாடல்களைப் பொருளுணர்ந்து ஓதுதல் வேண்டும்.
மாலை பத்திப் பாடல் என்றது, பத்திப் பாடல்களாகிய மாலையென்றும், பெருமை தரும் பக்திப் பாடல் என்றும். பெருமை வாய்ந்த அழகிய பக்திப் பாசுரங்கள் என்றும், மயங்கச் செய்கின்ற பற்றுண்டாக்கும் பாக்கள் என்றும் கொள்ளலாம்.