Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.602.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்தோராம் அதிகாரம்

பத்தித் தோத்திரம்.

2.

ஞானக்கண் வாயிலுற்று நாளும் புகழ்பாடி

தேத்துட் சேர்ந்து திகழ்.

602

குறள் விளக்கம்

ஒருமையோடு புருவமத்திய பீடத்திருந்து, அகப்பதியை நோக்கி அருட்பாக்கள் பாடித் துதித்திட துதிதிட மனம் உள்ளழுந்தும். இந்நிலையில் தியானித்து நிற்க, நம்மை மறந்து, பதி சோதியிற் கலந்து நாமதுவா(கு)ம் அனுபவம் உண்டாகும்.

அன்றியும், பக்தி ரசப் பாடல்களைக் கேட்டுக் கொண்டேனும் அதன் பொருள் சுட்டும் பதி ஒளியை அகத்தே சிந்தித்து, தியானித்துக் கொண்டேனும் இருந்தால், அத்துவிதானுபவம் உண்டாம்.

சன்மார்க்க நிலை நின்று பாடிப் புகழ்ந்து பத்தி செய்திருத்தல் பேரின்பமுறு நெறியாம்.