Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.601.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்தோராம் அதிகாரம்

பத்தித் தோத்திரம்.

1.

சிற்றம் பலத்தின் திருமும் தினநின்று

சுட்டற்று சூழத் துதி.

601



குறள் விளக்கம்


அக இல்லத்திலிருந்து வாழ்பவர்கள், அங்கிருந்து அருளானந்த உறுவதற்கு, வாய்த்த போதெல்லாம் கடவுள் உண்மை உயர்வையும், நமது தற்சுதந்திரம் இல்லா இழி நிலையையும் நினைந்து நினைந்து திருமுன் விண்ணப்பித்துக் கொண்டும், பத்தித் தோத்திரம் செய்து கொண்டும் இருத்தல் வேண்டும். ஆதலின், இவ்வதிகாரம் இங்கு பொருத்தப்பட்டுள்ளதாம்.


அம்பலத்தின் முன் வாயிலாகிய புருவ மத்தியத் தானத்திருந்து, அகநோக்கி, நம் பதி சமூகத்தில் தினமும் விண்ணப்பித்துத் தோத்தரித்துக் கொண்டிருந்தால், பக்குவத்தே அப்பழக்கம் முற்றும் போது நம் பதியோடு சுட்டற்று அது நாமாகி வாழும் நிலை எய்திடலாகும்.


புறக்கோயில்களில், திருச் சந்நிதியில் அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்குதல், நம்மை மறந்து அகங்காரம் ஒழிந்து, பதித் திருவடியில் கூடி நிற்கும் உபாயச் செயலைக் குறிப்பதாம்.