தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபதாம் அதிகாரம்.
வீட்டுக்குரியோர்.
|
9. |
ஊனிகந் துள்ளத் துறைபவர் வானிருந்தென் கானிருந்தென் னில்லை கவல். |
599 |
குறள் விளக்கம்
தேகப் பற்றற்று, புறநிலை கடந்து உட்சென்று ஆன்ம வீட்டில் வாழ்கின்றவர்கள் என்றும் உண்மையில் வாழ்கின்றவர்களாவர். அவர்கள் வானகத்திலே அற்புத இல்லம் ஒன்று அமைத்துக் கொண்டு வாழ நேர்ந்தாலும், அல்லது கானகத்தில் குகை, குடிசை முதலியவற்றில் வசிக்க நேர்ந்தாலும், சூழ்நிலையைப் பற்றி ஊன்றிக் கருத்தை செலுத்த மாட்டார்கள். எதனையும், விருப்பு, வெறுப்பின்றி நோக்கி, நிரதிசயானந்தமாய்க் கவலையற்றே இருப்பார்கள்.
Write a comment