Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.598.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபதாம் அதிகாரம்.

வீட்டுக்குரியோர்.



8.

அருட்டிருவை மன்றல்கொண் டன்பருட்சேய் பெற்றார்க்

கிருப்பிடம் ஆன்மா இவண்.

598

குறள் விளக்கம்

அருட் சக்தியாம் பெண்ணை ஆன்ம இல்லத்தே திருமணம் புரிந்து கொண்டு வாழ்பவர்கள், காலத்தே அன்பு, அருள், ஆனந்தமாகிய மக்களைப் பெறுவார்கள். இப்புத்திரர்கள் தாம், மனிதனைப் புத்தென்னும் அசுத்த தேக நரகத்தினின்று விலக்கி, முத்தி என்னும் சுத்த பிரணவ ஞான தேகத்தில் வாழ்விப்பவர்களாவர். இந்த அக இல்லமும், இல்லற வாழ்வும், இதனால் கிடைக்கப்பெறும் நன் மக்கட் பேறும், பேரின்ப வாழ்வும் சுத்த சன்மார்க்கத்துறும் யாவருக்கும் உரிமையாம்.