Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.597.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபதாம் அதிகாரம்.

வீட்டுக்குரியோர்.


7.

இல்பிரியா இல்லாளை யென்றும் பிரியாது

இல்வாழ்வார்க் காம்பே ரிசை.

597

குறள் விளக்கம்.

உண்மை வீடோ நமது ஆன்மாவாய் உள்ளது. ஆன்ம இயற்கையாம் தயாசக்தியே

என்றென்றும் அதில் பொருந்தி இருக்கின்ற இல்லாளாக அறிந்து கொள்ள

வேண்டியுள்ளோம். அப்படி அறிந்து கொண்டு அவ்வில்லாளாகிய தயா சக்தியைப்

பிரியாது வாழ்வதுவே பெரிய இன்பமாகிய புகழைத் தருவதாம். ஆதலின், இவ்வக

இல்லமும், இதற்கு உரிய இல்லாளாம் தயா திருவும் நமக்கே முழு உரிமையாம்.