Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.595.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபதாம் அதிகாரம்.

வீட்டுக்குரியோர்.


5.

கட்டாத வீடவனி காணாத வென்றுமுள

சுத்ததய வாளர்தம் சொத்து.

595


குறள் விளக்கம்


சுத்த தயா சன்மார்க்கர்களுக்கே முழு உரிமையுடைய சொத்து இந்த அக இல்லம். இது உலகக் கட்டிடங்கள் போல் அழி பொருள்களால் ஆக்கப்பட்டதல்ல. இவ்வீடு அழியாது என்றும் உள்ளதே ஆயினும் பிறர் கண்ணுக்கு என்றும் புலனாகாததாம். இத்திரு வீடும் அழியாதது. இதில் உறைவோரும் அழியாரே.