தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபதாம் அதிகாரம்.
வீட்டுக்குரியோர்.
|
4. |
குடிலையே கொண்டாரைக் கோன்கொள்ளுங் கொண்டா லொடிவிலை வாழுமுயிர்க்கு. |
594 |
குறள் விளக்கம்
குடிலையே கொண்டார் என்பது, குடிசையைத்றும் தம் உறையுளாகக் கொண்டவர் என்றும் அவர் அரசனுடைய ஆதரவு பெறுவாராயின் நல் வாழ்வு அடைவார் என்றும் பொருளாக்குவர் புற நாட்டத்தார்.
உண்மை உணர்ந்தோர், குடிலை என்பதைப் பிரணவம் என்றும், அருளொளி என்றும் தெளிந்து அதனையே தமது இல்லமாகக் கொண்டவரைக் கோனாகிய கடவுளே ஆதரவு அளித்து ஏற்றுக் கொள்ளுவதால் அழியா இன்ப வாழ்வும் பெறலாகும் என்றும் அறிவார்கள்.
Write a comment