Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.592.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபதாம் அதிகாரம்.

வீட்டுக்குரியோர்.


2.

சிறுகவே கட்டித் திருவோங்க வாழற்(கு)

உறுகவே யம்பலத் துள்.

592


குறள் விளக்கம்.


பேரின்ப வாழ்வில் பெற்றோங்கிட வேண்டில், புறப்புலனின்ப வாழ்வில் பற்றொழிதல் வேண்டும். மிகச் சிறியதாகிய அணு மய சிற்றம்பலத்தில் பொருந்து உலகியலைத் தயாவியலாக நடத்தினால் நித்தியமாகிய பெரிய இன்பத்தை அடையலாகும்.


இடம் பொருள் ஏவல் முதலிய வசதிப் பெருக்கினால் துய்க்கின்ற இன்பம் பெருவாழ்வாகாது ‘சிறுகக் கட்டி பெருக வாழ்” என்பது பழமொழி. நமது பதியும் நம் சிற்றம்பலத்தில் இருந்து கொண்டுதான் பேரண்டப் பெரு உலகெல்லாம் விளங்க ஆட்சி புரிந்து கொண்டு ஆனந்தமாக வாழ்கின்றார்.