தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபதாம் அதிகாரம்.
வீட்டுக்குரியோர்.
|
1. |
சிற்றம் பலமே திருவீ டிதற்குரியர் சுத்தசன் மார்க்கரே சொல். |
591 |
குறள் விளக்கம்
இவ்வுலகில் நிலவி நின்று தயா இன்பம் வளர்க்க ஓர் இல்லம் இன்றியமையாதது. அந்த இல்லமும் நமது சொந்த இலமாய் இருப்பது நல்லது. திருவருளால் நமக்கு ஓர் அக இல்லம் வழங்கப் பெற்றுள்ளோம். இவ்வீட்டின் உரிமம நமதானால் தான் இன்ப வாழ்வு வாழ முடியும். ஆகவே, அவ்வின்பம் பெறு நிமித்தம் அதற்கடுத்த இவ்வதிகாரம் இணைக்கப் பெறுகின்றதாம்.
நமது பதி விளங்கும் சிற்றம்பலமே நல்லா வீடாக அமைந்துள்ளது. கடவுளால் வழங்கப்பட்டுள்ள இவ்வில்லம் நிறையருள் உடையார்க்கே உரிமையாகின்றது. அருளில்லார்க்கு இவ்வக இல்லம் புலனாவதில்லை. அப்படி ஒன்று இருப்பதாகவும் அறியார்கள், அவர்கள், தமக்குச் சொந்தமெனப் போற்றிக் கொண்டு வாழ்கின்ற புற இல்லமும் வாழ்வும் பொய்த்துப் போகின்றன.
ஆதலின் அருள் வண்ணராகிய சுத்த சன்மார்க்கர்க்கே அழிவற்ற இல்லமும், அதன் உரிமையும், பேரின்ப வாழ்வும் கிடைக்கின்றன.