தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தொன்பதாம் அதிகாரம்.
தயா இன்பம்.
|
0. |
தயவே கடவுளர் சச்சிதா னந்தச் சுயவுரு நம்மின் துணை. |
590 |
குறள் விளக்கம்.
நமது அகப் பெரும் வாழ்விற்கு உற்ற துணையாய் இருப்பது கடவுளரின் தயவுச் சேர்க்கையே. அக்கடவுள் சத்தாம் தகரமே வடிவமாய், சித்தாம் யகரமே அப்பதி விளங்கும் இடமாகிய ஆன்மாவாய், வுகரமே அருளானந்த அனுபவச் செயலாய்க் கொண்டு திகழ்கின்றதால், அவரை அடைகின்ற நாமும் சீவ தயவைப் பெருக்கப் பெருக்க அது கடவுள் தயவாகப் பழுத்து, சச்சிதானந்தமாம் பேரின்பக் கனியாக ஆக்கப் பெறுவது சாத்தியமாகும்.
Write a comment