Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.588.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தொன்பதாம் அதிகாரம்.

தயா இன்பம்.

8.

ஆனந்த சோதியோ டத்துவித மாயிருந்(து)

ஊனந்தர்க் கின்பிங் குதவு.

588

குறள் விளக்கம்

இம்மனித வடிவில் ஆன்மாவே முதலிடம் பெற்று விளங்குகின்றது. ஊன் உடம்பு முடியும் (அழிந்து போகும்) முடிவாக உள்ளது. வேறு விதமாய்க் கூறின், ஆன்மா அழிவற்ற முதலாய் இருக்க, மேலுறும் தேகம் வந்து வந்து அழிந்தழிந்து போகின்றனவாம்.

நாம் ஆன்ம மயமாய் இருந்து கொண்டு, ஊன் உடம்பு பெற்றுள்ள ஜீவர்களுக்கு தயவோடு இன்பம் செய்யவே பிறந்துள்ளோம். இவ்விதம் ஆன்ம இன்ப வாழ்வில் ஓங்க ஓங்க, உள்ளிருந்து விளையும் அத்துவிதானந்த அனுபவம் ஊன் உடலையும் தன் மயமாக மாற்றிக் கொண்டு பேரின்ப வடிவாக நிலவும்.