தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தொன்பதாம் அதிகாரம்.
தயா இன்பம்.
|
6. |
பேரின்பஞ் சேரப் பெருங்கருணை யுட்சேர்த்த காரிய மிப்பிறவி காண். |
586 |
குறள் விளக்கம்
அழியாத பேரின்ப வாழ்வு, ஆன்மாவுக்கு அருள வேண்டியே, கடவுளர் தனிப் பெருந்தயவு சக்தி அகத்தே பொருத்தப்பட்டுள்ளது. இதனால், இவ் இன்ப நிலை அறிந்து அடையப் பெறும் வரை, மேலும் மேலும் அவ்வான்மாவுக்கு அறிவு வளர் பிறவிகள் தொடர்ந்து வழங்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இவ்வுண்மையே இந்த மனிதப் பிறப்பில் பகுத்தறிந்து கொள்ள நேர்ந்துள்ளது, இப்போது. இது கொண்டு அருட் பேரின்பம் பெறுவது இப்பிறவியின் குறிக்கோளாகும்.
Write a comment