தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தொன்பதாம் அதிகாரம்.
தயா இன்பம்.
|
4. |
இலத்திருந்தும் நீத்தும் இயலகஞ் சேரார்க்(கு) அலகைத்தேர் இன்பமென லாம். |
584 |
குறள் விளக்கம்
இயற்கையாக எவர்க்கும் உரிய ஆன்ம இல்லத்தை அடைந்து வாழாதவர்க்கு உண்மை
இன்பம் உண்டாவதில்லை. இல்லத்திருந்து உலகியலை இனிது நடத்தினும். அல்லது இல்லம்
துறந்து தனியிடத்துற்று தவம் செய்திருந்தாலும், அகநிலை பெற்று அனக வாழ்வு வாழாதார்க்குத்
தோன்றுமின்பம் எல்லாம், கானற்சலம் என்னும் பேய்த்தேராகப்போம்.
Dayavukural Bk
Write a comment