Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.582.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தொன்பதாம் அதிகாரம்.

தயா இன்பம்.


2.

உயிரு முணர்வு மொளிர வொளிசெய்

தயவின் மகிழ்வு தலைத்து.

582

குறள் விளக்கம்

தயவினால் வருகின்ற இன்பம் சிறந்தது. தலைமையானது. மேலும் அத்தயவிலும் சீவர்களிடத்து நாம் வழங்குகின்ற உயிர் விளக்கம் தரும் பசிப்பிணி யாற்றும் செயலும், மெய்யறிவு விளக்கம் செய்யும் செயலுமே உயர் இன்பம் விளைவிப்பனவாம்.

இவ்விளக்கம் தராத மற்ற எவ்விதமான செயல்களும் ஓரளவு மனோ மகிழ்ச்சியை உண்டு பண்ணுமே ஒழிய ஆன்ம இன்பத்தை வழங்காது.