Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.579.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தெட்டாம் அதிகாரம்.

விசார சங்கற்பம்.

9

கடவுணிலை சோராக் கபால நடுநின்

றுடலொளி சேர வுழை.

579

குறள் விளக்கம்.

சிரநடு சிற்றம்பலச் சோதியைப் பற்றி நின்று வழுவாது வாழற்கு இச்சங்கற்ப விசாரம் மேற்கொள்ள வேண்டியுள்ளோம். அப்படி சங்கற்பத்தோடு இருந்து கொண்டு புற உலகில் தயவுப் பணி புரிவதால் அகங்கண்ட சோதியே புறங்கொண்டு இவ்வுடலையுந் தன்மயமாய்ச் செய்து வாழ்விக்கும். மற்றபடி சங்கற்பமில்லா எல்லா உழைப்பாலும் இருவினை சூழப் பிறவி தொடர் வளரும்.