தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தெட்டாம் அதிகாரம்.
விசார சங்கற்பம்.
|
1. |
சங்கற்ப மென்ப தனியொன்றைப் பற்றிவிடா தங்குற்ற வுள்ளத்துத் தான். |
571 |
குறள் விளக்கம்
முன் அறிவித்த ஞாபகத்தின் உண்மையைச் சத்விசாரத்தால் அடைய, உள்ளத்தில் அசைவற நிற்கும் மனோநிலை உண்டாகும். அதுவே, விசார சங்கற்பமாக உள்ளதால் இவ்வதிகாரம் அடுத்து வந்துள்ளதாம்.
தனிப்பெரும் தயாஜோதி உண்மையை மனோ நன்முயற்சியால் சதா நினைந்து நினைந்து, அக மனத்தில் ஊன்றச் செய்து, அப்பற்று விடாது தங்கி வாழ்தல் ஒன்றே சத் விசாரத்தால் பெறப்படுகின்ற நித்திய சங்கற்பமாகும். சாதாரணமாய் ஒன்றைத் தீவிரமாய்ச் சிந்தித்து தெளிந்து உறுதிபட்ட உள்ள நினைவே சங்கற்பம் என்று கூறுவர்.
தாள் = முயற்சி, (அகத்தே பொருந்திய கடவுள்) திருவடி.
Write a comment