Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.566.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


ஐம்பத்தேழாம் அதிகாரம்

ஞாபக விசாரம்.


6

மவுன மகஜோதி வள்ளலொளி கண்டு

தவுதலில் ஞாபகம் தாங்கு.

566


குறள் விளக்கம்


அகம் என்பது ஆன்மாவாம். இதில் தயாபெரும் கடவுள் ஜோதி பிரிவுறக் கலந்துள்ளதை உணர்த்த ‘மகம்’ என்று கொள்ளலாகும். அதாவது ‘ம்’ என்னும் மகரமெய்யே கடவுட் ஜோதியாய் அகத்தே பொருந்தியுள்ளதாம். இவ்வான்ம ஜோதியைப் பூரணமாய் நிரம்பச் செய்கின்ற, ஞான பக்தி – கருமம் கூடிய யோகமே தவுதலில்லாத (குறைவில்லாத) ஞாபகம் ஆகும்.


இவ்வான்ம யோகமே, மந்திர யோகமென்றும், மகா யோகமென்றும். ராஜயோகமென்றும் மொழியப்படும். இந்நால்வகை யோகமும் ஒன்று பட்டு குன்றாது ஒளி வீசுகின்ற ஞாபகம் தான் யாவரும் தாங்க வேண்டும்.