தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தேழாம் அதிகாரம்
ஞாபக விசாரம்.
|
5 |
கருமநமைப் பற்றாக் கருணை கதிர்செயல்போல் ஒருமை மறவா துதவு. |
565 |
குறள் விளக்கம்
சூரியன் வானத்தில் ஒளிவீசி விளங்க, அதன் சக்திக் கதிர் பிரகாசத்தால், நமது உலகுயிர்ச் செயல்கள் யாவும் தாமே காரியப்படுகின்றன. இது போன்று நாமும் ஆன்ம ஞானாகாரத்தில் அருட்ஜோதியாய் விளங்கவே, ஜீவ தேகேந்திரிய தோற்றமெல்லாம் உண்டாகி உள்ளனவாம்.
ஆன்ம இயற்கையாகிய தயவால் உலகுயிர்கட்கு உதவுதல் பற்றற்ற கருமமாகும். சத்விசாரத்தால் அகமொன்றி நின்று புரிகின்ற புறச் செயல் ஒன்றே நிஷ்காமிய கருமமாகும். தயாவிசாரம் இல்லாத சமயங்களில் இக்கரும யோகம் சித்திக்காது.
Write a comment