தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தேழாம் அதிகாரம்
ஞாபக விசாரம்.
|
3 |
ஞான விசாரநிலை நந்தலை நாப்பணுற ஈனத் திழியா திரு. |
563 |
குறள் விளக்கம்.
ஞானத்தால் சத்விசாரஞ் செய்து, மெய்ப் பொருளை அருட்ஜோதி வண்ணமாக நமது சிர நடு வைத்து உணர்ந்து கொள்ளப்படும். இந்த ஞான நிலை உலகத்தில் விளங்கும் சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றும் கடந்த நான்காம் படியாகும். இந்நான்காவது நிலையிலும், அதாவது ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம் என்னும் முப்பிரிவின் மேல்தான் சிற்றம்பல ஜோதியின் சேர்க்கை உண்டாம்.
இதுவே ஞானத்தில் யோகமென்னும் ஈற்றயல் நிலையாம். இந்நிலையின் கண் ஞாபகம் மாறாத தயவோடு கூடிய ஞான யோகமே மெய்ப் பொருட்சித்தி அளிப்பதாம். ஆகவே, தயா ஞான யோகத்திருந்து மேற்படிக்கு ஏற வேண்டுமே அல்லாது கீழிறங்கி அழிவுறலாகாது.
Write a comment