Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.562

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


ஐம்பத்தேழாம் அதிகாரம்

ஞாபக விசாரம்.




2

மெய்ப்பொருளை சேர்க்கும் விசாரமே ஞாபகமா

யெய்திடும் யோக மிது.

562


குறள் விளக்கம்


சதா மெய்ப்பொருள் ஞாபகமாய் இருந்து கொண்டு மற்றச் சிந்தனைகளை எல்லாம் விடுத்துச் செய்கின்ற சத் விசாரமே, கடவுள் தயவால் அதனை முற்றும் அடைவிப்பது. இதனால் இவ்விசாரம் தானே உண்மையான யோகமாக உணரப்படும். ஏனெனில், யோகமென்பது அடைவிப்பது, கூட்டி வைப்பது என்றுதான் பொருளாம்.


உலகத்தில் பொருள் குவிக்கும் லட்சியம் உடையவர்க்கும் இக விசாரமே காரணமாகும். இந்தப் பொய்ப் பொருள் சேர்க்கும் யோகம் தயவு இல்லாததால் முடிவில் கெடும்.


இதனால் ஞாபகம் என்பதும் ஓர் யோகமாக உள்ளது என்றும், இதன் சாதனையால் இகத்தும் பரத்தும் பயன் பெறலாகும் என்றும் அறியப்படுகின்றது.