தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தாறாம் அதிகாரம்.
கடவுட் காட்சி.
|
10 |
வள்ளலருட் ஜோதி மலர்ந்துலக மெல்லாமுங் கொள்ளவரு காட்சியே கொள். |
560 |
குறள் விளக்கம்
ஆன்மாவின் கண்ணின்று, அரும்பி மலர்ந்து தயவு உணர்வோடு விரிந்து, உலகெல்லாம் நிறைந்த பெருஞ் ஜோதிமயக் காட்சியே பெறுதல் வெண்டும். இக் காட்சி அனுபவமே, தனியொரு ஆன்மாவில், நம் தயா ஜோதி வள்ளல் வெளிப்படுத்திப் பேரின்ப நிலை வழங்குவதாகும்.
ஆதலின் யாவரும் புற வித்தியாசங்களை எல்லாம் பற்றற விட்டு அக விசாரத்திருந்து அருள் உணர்வு பெருகப் பெருக உலகியலில் வாழ்ந்து எல்லோரும் அகப் பெருஞ் ஜோதியைக் கண்டு ஆனந்தமுறக் கடவர்.
Write a comment