தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தாறாம் அதிகாரம்.
கடவுட் காட்சி.
|
9 |
நிரவி யழலு ருவாய் நீண்டவெளி காண்க கரவிலான் மானுபவங் கண்டு. |
559 |
குறள் விளக்கம்.
சத்விசாரத்தால் ஆன்ம உண்மையைத் தெளிந்து கொண்டு, ஆன்ம இயற்கையாகிய கடவுள் தயவு நிரம்ப நிரம்ப, அகவொளி தோன்றி விரிந்து, புறவெளியெல்லாம் நிறைந்து தயாபெருஞ் ஜோதிக் காட்சி அனுபவம் உண்டாகும். இதுவே கடவுட் காட்சியாக அறியப்படும்.
“நிரவி யழலுருவாய் நீண்டவெளி காணில்
அரவணையா னாகும் உடம்பு”
என்பது ஒளவை ஞானக் குறள் வாசகம். இதில் பெறும் ஆன்ம ஜோதிக் காட்சி அனுபவத்தால் கல்பதேக சித்தி உண்டாகும். இதுவே அரவணையிற் பள்ளி கொண்ட அரியுருவாக அணிந்து கூறப்படுவது.
சுத்த சன்மார்க்கத்தில், சுத்த தயவே காரணமாய் இருப்பதால், இதில் காணும் ஆன்ம ஜோதிக் காட்சியால் தயாஜோதி வடிவம் சித்திப்பதாம்.
Write a comment