தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தாறாம் அதிகாரம்.
கடவுட் காட்சி.
|
8 |
உருவெளியும் ஓங்கும் ஒளிவெளியும் தோன்றும் ஒருமையு ளாழ்ந்து வுணர். |
558 |
குறள் விளக்கம்.
மன ஓர்மை மிக, புறக்கரண இந்திரியக் காட்சி மங்கும். அப்போது அவ்வொருமையில் ஊன்றி நினைத்த வடிவம், உருவெளித் தோற்றமாக விளங்கும். அதாவது. அக மனத்தில் மறைந்துள்ள வடிவம் புறக்கண்ணுக்கு உண்மை போல் தோன்றுகின்றதாம்.
மேற்படி மன ஓர்மை, உருவம் கரைந்த ஒளி வண்ணமாய்த் திகழும்போது, யோகக் காட்சியில் காணும் ஜோதி வெளித் தோற்றமுண்டாகும்.
சுத்த தயா ஒழுக்கம் இல்லார்க்கு இக்காட்சியால் மெய்ப்பயன் உண்டாவதில்லை. அவை யாவும் தோன்றின மறையும். ஆகையால், இந்த ஜோதிக் காட்சிகளை எல்லாம் கடவுள் காட்சியெனக் கருதுதல் அறியாமையே.
Write a comment