Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.556.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தாறாம் அதிகாரம்.

கடவுட் காட்சி.

6

கனாநனா காட்சியிற் காண்பன வெல்லாம்

மனாதியின் பக்குவ மாற்று.

556

குறள் விளக்கம்

தயவும் ஞானமும் மனத்திற்குப் பக்குவம் வருவிப்பன. பூர்ண பக்குவப்பட்ட மனம், சுத்த தயா ஜோதிப் பொன்னாக விளங்கும். பொன்னான மனத்தின் மாற்றுக்குத் தகவே புறக் காட்சிகள் வந்தமைகின்றன. கனவிலும், விழிப்பு நிலையிலும் நாம் காண்பன எல்லாம் நம் மன மாற்றையே உரைத்துக் காட்டுகின்றன.

ஆதலின், அக்காட்சியிலும், ஜீவப் பொருள்களிலும் பற்றுதலும், வெறுப்புறுதலும் இல்லாது சுத்த கரணமுறத் தயவும் விசாரமும் வளர்த்தல் வேண்டும்.