Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.553

தினம் ஒரு தயவுக்குறள். சுவாமி சரவணானந்தா. ஐம்பத்தாறாம் அதிகாரம். கடவுட் காட்சி. 5. கம்மியனுஞ் சித்திரக் காரனுஞ் செய்தருளுஞ் 553. செய்மையுரு செம்பொருளோ செப்பு. =0=0=0=0=0=0=0=0= குறள் விளக்கம். மிக்க அழகான திருவுருவங்கள், மூர்த்தி வடிவங்கள் யாவும், சிற்பகலா பொற்பணியாளர்கள் செய்து கொடுக்கின்றனர். வனப்பு மிக்க தெய்வீகச் சித்திரங்களைத் தீட்டித் தருகின்றனர் சைத்ரீக வல்லுநர்கள். இவ்வுருவங்கள் எல்லாம் பரம்பொருளில் அருட்ஜோதி உருவிற்கு எங்ஙனம் ஒப்பாகும் ? ஆதலின், இவற்றைக் கண்டு கடவுளையே நேரில் தரிசித்துவிட்டதாகச் சொல்ல முடியுமோ ? மனோ கரணப்பக்த்திக்குத் தக உள்ளத்தில் பரவசம் உண்டுபண்ணக்கூடியவை இத்திருவுருவங்கள் யாவும்.