தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தாறாம் அதிகாரம்.
கடவுட் காட்சி.
|
2 |
கண்ணாலே காணக் கடவுள் உருவுண்டோ திண்ணா ருருப்போம் சிதைந்து. |
552 |
குறள் விளக்கம்
மிக வன்மையுடைய கல்லும், மலையும், உலோகத் தாதுக்களும் ககனக் கோட்களும் கூட சிதைந்து அழிந்து ஒழிந்து போம். ஆதலின் அவைகளால் ஆக்கப்படும் உருவம் ஒன்றை, நித்தியம் ஆகிய எல்லாம் வல்ல கடவுள் வடிவமாகக் கொள்ளக் கூடுமோ ? கூடாது. ஆகையால் கண்ணாற் காணத்தக்க ஒரு வடிவம் கடவுளுக்கு இல்லை என்ப.
சத்விசாரமில்லாத கீழ்நிலையிலுள்ள மாந்தர்களுக்காக, கடவுளை ஓர் கற்பனை வடிவில் உண்மையறிந்தோர் பாவிக்கச் செய்கின்றனர். பக்குவமடைந்து உண்மைக் கடவுள் அறிவதற்கு இஃது ஓர் உபாயமாகும்.
Write a comment