Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.551

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தாறாம் அதிகாரம்.

கடவுட் காட்சி.

1

உண்மைக் கடவுளை யுள்ளவா காணற்கு

கண்மை விசாரக்கண் காண்.

551

குறள் விளக்கம்

சத்விசாரத்தால் அகமும் புறமும் கண்டு வாழும்போது, உள்ளத்தில் கடவுட் காட்சியுண்டாகும். அப்போது, அந்த உள்ளத்தினின்றே கடவுட் காட்சியின் விரிவாக, பிரபஞ்சமெலாம் அதில் அடங்கித் தோன்றும். இதனால் இவ்வதிகாரம் ஈண்டு இலங்குவதாம்.

தயாவிசாரமாகிய கண்ணைக் கொண்டுதான் கடவுளைக் காணக் கூடுமேயல்லாது, சாதாரணக் கட்புலனுக்கு உண்மைக் கடவுட் காட்சி அனுபவப்படாது. கரண, இந்திரியக் காட்சிக்கும் எக்காலத்தும் புலனாகாது. அணு, பரமாணு, பிறவா அணு (Atom, molecule, proton) ஆகிய இத நிலையெல்லாம் கடந்து உள் விளங்குகின்றது அருவுருவக் கடவுட் ஜோதி. இதனைச் சத்விசார ஞானத்தாற் கண்டு, சுத்த தயவினால் பெற வேண்டியுள்ளதாம்.