Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.550.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தைந்தாம் அதிகாரம்.


10

வீடா தகத்திருக்கும் மெய்ஞானத் தார்க்கல்லால்

வீடாஅச் சூழும் வினை.

550

குறள் விளக்கம்.

ஆன்ம அகமே நமக்கு உண்மையான நிலைபெற்ற வீடாக உள்ளது. இதனை விட்டுப் புறத்தலையாது அகத்திருக்கும் மெய்ஞ்ஞானிகளைத் தவிர மற்ற யாவரையும் தொடர்வினைச் சூழல் எக்காலமும் விடாது.

சத்விசாரத்தின் லட்சியமே இவ்வக வீட்டை அறிந்து, அடைந்து, சுத்த தயவாலே வினையறு சுத்த வாழ்வு வாழ்தலே ஆகும்.

வீடாதகத்து = விடாது அகத்து, அல்லது வீடாத அகத்து, அகத்திருந்து விடாது தங்கி இருப்பதுவே, வீடென்னும் முத்தி நிலையாகும்.