தினம் ஒரு தயவுக்குறள்-எண்.548.
சுவாமி சரவணானந்தா
ஐம்பத்தைந்தாம் அதிகாரம்.
விசாரமும் சூழ்நிலையும் .
8. ஆனந்தம் உள்விளைய ஆங்கெவை வேண்டுமோ
தானந்தா தீயுந் தயவு 548.
குறள் விளக்கம் -
ஆன்ம இன்ப வாழ்வுக்கு, அகப்பக்குவம் உண்டாகவே புறத்தே எல்லாப் பொருளும் செயலும், சூழ்நிலையும் வந்து வந்து உதவுகின்றன. இவை யாவும் நம் தயாபெருஞ் ஜோதி நந்தாது (என்றும் ஒளிவீசி விளங்கி) வழங்கிக் கொண்டே உள்ளவை என்று சத்விசாரத்தால் கண்டு கொள்ள வேண்டும்.
புலனின்பம் விளைவிக்கும் பொருளில் செயலில் விருப்பங் கொண்டு முயன்று பெறும் சிறு இன்பமெல்லாம் உண்மை ஆனந்தம் ஆகாது.
Write a comment