தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தைந்தாம் அதிகாரம்.
விசாரமும் சூழ்நிலையும்.
|
3 |
விசாரத்தா லொன்றுக மெய்ப்பொருளை யொன்றி யுசாவுற்றோர்க் கீக வொளி. |
543 |
குறள் விளக்கம்.
நித்தியாமாயுள்ள பரம்பொருளை சத்விசாரத்தால் கண்டு அகத்தே கொண்டு வாழ்வதுதான் உண்மை வாழ்வு. இந்நிலையினின்று சூழ வரும் உரியோருக்குத் தயா செயலினால் ஒளி வளர்த்தல் வேண்டும்.
இந்தச் சத்விசாரமும், பரோபகாரமுமே நம் தயா நெறிக்குத் துணையாக உள்ளன. சத்விசாரமில்லாத பரோபகாரச் செயலும், பரோபகாரமில்லாத அபர விசாரமும் நிறைவு பெறாது. அவற்றால் பெரும் பயனும் உண்டாகாது.
Write a comment