Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.542.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தைந்தாம் அதிகாரம்.

விசாரமும் சூழ்நிலையும்.

2

பதியாணை யின்றிப் படிமீது வொன்றும்

உதியாஅ தீண்டாஅ துற்று.

542

குறள் விளக்கம்.

நமது அகமுடையானின் அருளாணைப் படியேதான் இவ்வுலகில் யாவும் நிகழ்கின்றன, அவ்வாக்கினை இன்றி ஏதொன்றும் தோற்றுவதில்லை, வந்து சாருவதுமில்லை. கடவுள் விசாரத்தால் அகத்தே ஒன்றி நின்றால், அங்கிருந்து புறப்படுகின்ற அருள் ஆணையின் செயலொடு, அன்பு செய்து கொண்டு இன்பம் அடையலாகும்.

ஆன்காக்களுக்குத் தேக தோற்றமும் அதற்குக் காரண வினைச் சூழலும் இடைவிடாது உதிப்பதும் தீண்டுவதுமாயுள்ள உண்மை விளக்கவே “அ” என்ற உயிரளபெடை சேர்ந்துள்ளதாம்.