Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.540..

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.

ஐம்பத்து நான்காம் அதிகாரம்.

சோதிச் சின்னம்.

10

கந்தழி யாதிசின்னங் காட்டா அருட்ஜோதி

நந்தளியிற் காண்கவிஞ் ஞான்று.

540

குறள் விளக்கம்.

கடவுள் வழிபாட்டிற்காக நம் தமிழ்ப்பழங்குடி மக்கள் கண்ட கந்தழி, கொடிநிலை, வள்ளி முதலாகப்பின்வந்த ஜோதிச் சின்னங்கள் எல்லாமும், இன்று அருட்பெருஞ் ஜோதி தோற்றத்தால் மங்கி மறைந்து போகின்றன. ஏனெனில், எல்லாப் புறச் சின்னங்களும் புலனறிவுக்கு விருந்தாய் இருந்து ஒழிவனவன்றி, அகம் இருந்து அனுபவிக்கப்படுகின்ற அருள் இன்ப உணர்வுக்கு உதவுவது இல்லை.

சத்விசாரத்தால் நமது உள்ளத்தளியில் காண்கின்ற அருட்பெருஞ்ஜோதியைப் பிற கற்;பனைச் சின்னங்களால் வழங்குவித்தல் அருமை.