Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.538.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.

ஐம்பத்து நான்காம் அதிகாரம்.

சோதிச் சின்னம்.

8

கோணிலைசூழ் சோதிக் குறியே சுவத்திகமே

ஆணியிலா நற்சிலுவை யாம்.

538

குறள் விளக்கம்.

சுவத்திகமும், சிலுவையும் சூரிய குடும்ப இயக்க நிலைத்தோற்றம் ஆகும். அதாவது ஞாயிற்றை நடுவைத்து கோள்கள் சுற்றி வருகின்ற நிலையைக் குறிக்கின்றது ஸ்வதிகச் சின்னம். சுழற்சியைக் காட்டாது நிறுத்த நிலையைக் குறிப்பதுவே சிலுவை.

இவ்விரு சின்னங்களும் வான ஜோதி வழிபாட்டில் காணவும், அகஜோதி உண்மையைக் காணவும் அமைக்கப்பட்ட குறிகளேயாம். சுத்த தயா விசாரத்தால் மதச் சார்பற்ற நிலையில் இச்சின்னங்களின் உண்மையைக் காண வேண்டும்.

ஆணிகள் ஐந்து அறைந்த கிறிஸ்துவச் சிலுவைச் சின்னம் பின்வந்த மதச் சார்புதையதாம். அதுவும், சுத்த நிலையிலிருந்து நோக்கில், அருட்ஜோதிச் சிலுவையில், அன்புருவாம் ஏசுவை ஐந்தொழில் சக்தியொடு விளங்கக் கண்டு கொள்ளலாம்.