தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா
ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.
ஐம்பத்து நான்காம் அதிகாரம்.
சோதிச் சின்னம்.
|
3 |
கற்பூர ஜோதியிற் காரொளியும் பொன்னொளியும் பொற்பேறு தெய்வப் பொலிவு. |
533 |
குறள் விளக்கம்.
வானவெளி முற்றும் நிரம்பியுள்ள கடவுட் சக்திக்கு இயற்கை மணம் பச்சைக் கற்பூர மணமாகும். இது வான் நிலையைக் கெடுக்கும் எல்லாவிதமான நச்சுக் காற்றையும் தூய்மைப்படுத்தி ஜீவர்களை வாழ்விக்கின்றதாம்.
சாதாரண கற்பூரம் சுடர்விட்டு எரியும்போது அதில் பொற்ஜோதியும், அதன் உள் சிறிதாக நீல ஒளியும் காணலாகும். இவ்விரு வண்ண ஒளியும், சிவ விண்டு, ஆண் பெண் தத்துவங்களாகக் கொண்டு புனைந்துரைப்பர். இதனால், ஆலயங்களில் கற்பூர ஜோதித் தீபாராதனை முக்கியமானதாகக் கொள்ளப்படுகின்றது.
Write a comment