தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.
தெய்வத் திருவுரு.
|
10 |
தயாசோதி யொன்றது தானேஎவ் வண்ணத் தியானௌரு கொள்ளுந் திரண்டு. |
530 |
குறள் விளக்கம்.
அகண்ட சோதியாய் நிறைந்துள்ள கடவுட் சக்தியை எந்த வடிவாய்க் கருதி ஓர்மையோடு தியானம் செய்தாலும், தியான முதிர்ச்சியில் அவ்வடிவம் தரிசிக்கப்படுவது உண்மை. அகண்ட சோதிக் காட்சியும் இம்முறையில் தரிசிப்பது சாத்தியமே.
தயாபெருஞ்ஜோதியைக் கண்டு, தான் கெட்டு அதுவாகி நிற்க தன்னுருவும், அத்தயா சோதியால் திரண்டு விளங்குவது சுத்த சன்மார்க்க அனுபவம்.
Write a comment