தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.
தெய்வத் திருவுரு.
|
9 |
உருதெய்வ மெல்லாம் மொருதய வாகி அருவுருவாய் நிற்கு மகம். |
529 |
குறள் விளக்கம்.
தெய்வத் திருவுருவங்கள் யாவும் பலவாக அமைக்கப்பட்டிருப்பினும், அவை எல்லாம் தயவின் தத்துவமாகவே உள்ளனவாம். சத்விசாரத்தினால், ஒப்பற்ற தயா சக்தி ஒன்றே வேறு வேறாய தெய்வத் திருவுரு கொண்டு விளங்குகின்றது என்று அறிந்து கொள்ளப்படும்.
அத்தெய்வ உருவங்கள் எல்லாம் நம் அகத்தே இருக்கும் அருவுருவத் தயா ஒளியின் சாயையாகக் கண்டு அவ்வக உண்மைப் பதி நிலையில் பொருந்தி நிற்றல் வேண்டும்.
Write a comment