தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.
தெய்வத் திருவுரு.
|
7 |
உருக்கிடல் வேண்டும் உருவை விசார நெருப்பிடை அன்புற நின்று. |
527 |
குறள் விளக்கம்.
புறத்தே தோன்றுகின்ற உருவு கண்டு மயங்காது, சத்விசாரத்தால் அன்போடு நோக்குதல் வேண்டும். விசாரமாகிய சுத்தாக்கினியில் எவ்வுருவ மாயா தோற்றமும் உருகிட, உள்வளர் கடவுட் சோதி விளங்கும்.
உருவப் பற்றற்று, உண்ணின்று தயவோடு நம்மைச் சூழ்ந்த உலகை நோக்கில், எவர் மீதும், எப்பொருள் மீதும் நமக்கு விருப்பு வெறுப்பு உண்டாகாது, அந்நிலையினின்றே அன்பும் அறிவும் ஓங்கும் செயல்புரிதல் சத்விசாரப் பயனாகும்.
புறத்தே காணுகிற தெய்வ உருவங்களை கண்டு உண்மை என மயங்கி விடாமல் நல்ல விசாரத்தோடு மெய் பொருளை உணர வேண்டும்என்ற தயவு நோக்கோடு அந்த உருவங்களை காணலாம்.சுத்த சன்மார்க்க உண்மை அன்பர்கள் தயாபெரும் ஜோதியை உணர்ந்து விட்டதால் அவர்களுக்கு உலகியல் உருவ தெய்வ வழிபாட்டுகள் தேவை படாது.ஆனால் அவர்கள் முன்னொரு காலத்தில் உருவ வழிபாடு செய்துதயவு மார்க்கத்தினால் மேல் வந்தவர்கள் என்பதை உணர வேண்டும்.நம் வள்ளல் பெருமான் சைவ சமயத்தில் உண்மை தீவிர பற்று கொண்டு பின்
தயவினால் மேல் வந்ததாக நமக்கு சொல்லுகிறார்.அவரை சைவ சமயத்தில் இருக்க வைத்ததும் அந்த தயவு தான் என உணர வேண்டும்.
உண்மை தயவு ஜோதியை உணர்ந்து கொள்ளும் வரை எல்லோரும் எதோ ஒரு தெய்வ உருவ வழிபாட்டில் இருப்பது திரு அருள் சம்மதம் ஆகும்.
உருவ வழிபாட்டில் இல்லாத பல சமயங்கள் அருள் நெறியை உணராது போனது தான் உண்மை.இந்த உண்மையை உண்மை ஒருமை கடவுள்வழியாக சுவாமிகளே நீங்கள் சொல்லி வருவதை உணருவார்கள் யார் உளர்?சுவாமிகளே,நீங்கள் அன்பர்களுக்கு சொல்லுவது இது தான்.
"புறத்தில் என் போன்றோரை கண்டு சாரதீர்.அகத்தில் இருக்கும் தயவை சார்".புறத்தில் கருணை வாழ்வு நடத்து என உங்கள் தயவு அன்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிபிட்டு இருப்பது நன்று.தயவு சுவாமிகளுக்கு.by,vallalar wishes Aruljothisujatha.