Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.526.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.

தெய்வத் திருவுரு.

6

கடவுள் விசாரக் கவின்காட் டுருவம்

உடையதே தெய்வ வுரு.

526

குறள் விளக்கம்.

தெய்வத் திருவுருவங்களில் எவ்வளவோ சிற்ப்பக் கவின் பொருந்தி இருந்தாலும், சத்விசாரம் செய்வார்க்குக் கடவுள் தத்துவத்தை உணர்த்துவதாய் இருத்தல் வேண்டும். அப்போதுதான் அவ்வடிவம் தெய்வீகமானதாய்க் கொள்ளப்படும்.

மூர்த்தி வடிவங்களை அமைப்போனும் விசார வசத்திலிருந்து, அவற்றை வணங்குவோரும் அவ்வாறே இருந்தால் மிக எளிதில் தெய்வ உண்மை விளங்கும். மேலும் விசாரக் கண் கொண்டு நோக்குவோர் நல்ல சிற்ப வடிவில் தெய்வத் திருவையே காண்பர்.ஆதலின், நாம் விசாரம் மேற்கொள்ள வேண்டியதே மிக அவசியம்.

P Sujatha
கருணைமிகு சுவாமிகளுக்கு, எல்லாம் தயவு எனும் தெய்வீகமாக காண்பதற்கு தயவு ஒன்றே பிரதானம்.எல்லாம் தயவு வண்ணமாக காண பழகி வர வேண்டும்.நம் அனைவரின் பார்வையும் தயவு நோக்கில் இருந்தால் தயவு எனும் கருணை ஒன்றே என்றும் மனமாக,சொல்லாக,செயலாக விளங்கும்.swamygaluku daeiou.
Saturday, July 3, 2010 at 04:17 am by P Sujatha